Trending News :


கபாலி படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகின்றது. அடுத்த வருடம் சித்திரை மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் ஸ்பெஷல் அனுமதி பெற்று சென்னை ஏர்போர்ட்டில் நடத்தப்பட்டுள்ளது. இதில் ரஜினி மற்றும் தன்ஷிகா பங்கேற்றனர்.

மேலும், மதியம் 1 மணிக்கே ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிய, மாலை 4 மணி வரை மற்றவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார் ரஞ்சித்.


மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே உள்ள பந்தத்திற்கான நல்ல பாடம் தான் குற்றம் கடிதல்
மெர்லின், மணிகண்டன் இருவரும் புதிதாகக் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். மெர்லின் பள்ளி ஆசிரியை. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். மணிகண்டன் இந்து. இவர்கள் திருமணம் மெர்லின் அம்மாவிற்கு பிடிக்காமல் போகவே மனஸ்தாபம் உண்டாகிறது. இந்தச் சூழ்நிலையில், புதிதாக திருமணமான மெர்லின் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார். அங்கே பள்ளியின் சக தோழியான மற்றொரு ஆசிரியையின் விடுப்பை சரிகட்ட வேண்டி மெர்லின், இன்னொரு வகுப்பறைக்குச் செல்கிறார். அங்கேதான் ஒரு விபரீதம் நடக்கிறது. என்ன விபரீதம் அதிலிருந்து மெர்லின் எப்படி மீண்டார் என்பதே மீதிக் கதை.

மெர்லினாக ராதிகா பிரசித்தா, மணிகண்டனாக சாய் ராஜ்குமார் இருவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தப்பை எண்ணித் தவிக்கும் ஆசிரியையாகவும், கணவனை நினைத்து உருகுவதிலும் சரி ராதிகா பிரசித்தா கச்சிதம். சாய் ராஜ்குமார், மனைவியை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் எந்த சிக்கலும் வரக்கூடாது எனத் தவித்து மருகும் நடிப்பில் அத்தனை இயல்பு.


இவர்களை மிஞ்சி விடுகிறார்  செழியனாக வரும் சிறுவன் மாஸ்டர் அஜய். படத்தின் கதையும், கதைக்களமும் நாம் தான் என்பதை உள் வாங்கி சிறுவனுக்கே உரிய சுட்டித்தனம், குறும்பு என காட்டியதோடு கொஞ்சம் வாலுத்தனமும் செய்யும் இடங்கள் நம்மையும் அறியாது அஜய்யின் முக பாவனைகள், சிரிப்பு என ஒன்றிவிடச் செய்கிறது.

தோழராக வரும் பாவெல் நவகீதன், பிரின்சிபலாக வரும் குலோத்துங்கன் , அவரது மனைவியாக துர்கா, சிறுவன் செழியனின் அம்மாவாக வரும் சத்யா என படம் நெடுக கதாபாத்திரங்களிலும், கதையிலும் அத்தனை இயல்பு. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியமா என விவாதம் செய்வதும், அதே பாலியல் கல்வியை மிக அழகாக , எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என காட்சியாக என்பதைக் காட்டிலும் பாடமாகவே காட்டியுள்ளமைக்கும் இயக்குநர் பிரம்மாவுக்கு சபாஷ் போடலாம்.

கண்டிப்பு அவசியம் ஆனால் எதற்குக் கண்டிக்க வேண்டும் என்பதையும் சொல்லத் தவறாமல் , அதையும் மறைமுகமாக ஒரே பாடலில் ஒரு முத்தத்தில் காண்பித்த விதமும் சிந்திக்கச் செய்துவிடும் தருணங்கள். இருக்கற புள்ளையோட அருமைதான் உனக்குத் தெரியும், இல்லாத புள்ளையோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும் போப்பா. இப்படி படம் முழுக்க உணர்வுகள்.

உடனே மீடியாக்காரங்க கேமராவத் தூக்கிட்டு வந்துடுவானுங்க என்று ஒரு பக்கம் மீடியாக்களுக்கும் சவுக்கடிகள் விழுகின்றன. அதைச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பைட்ஸ் எடுத்துட்டா நாளைக்கு ஹெட்லைன்ஸ் பக்காவா இருக்கும் என மீடியாக்களின் பசியையும் போகிற போக்கில் ஆங்காங்கே சீண்டியிருக்கிறார்கள்.


 ஷங்கர் ரங்கராஜனின் இசை இயல்பாக இருக்கிறது.  கதைக்களத்துக்குத் தோதான பின்னணிஇசை. மனதை உருக்கும் பாரதியார் பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு சரியான காட்சியமைப்பில் புகுத்தப்பட்டதும் மற்றொரு சிறப்பு.

ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். இந்தப்படம் உலகம் முழுக்க கடந்த ஒரு வருடமாக பல திரையிடல்களையும், விருதுகளையும் பார்த்துவிட்டு வந்துள்ளது. கோவாவின் பனோரமா மற்றும் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா இவையிரண்டிலும் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் எனலாம். ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் படங்களுக்குப் பிறகு மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மூன்றாவது தமிழ்ப் படம் இந்தப் படமே. எல்லாவற்றிற்கும் மேல் தமிழில் சிறந்த படமாக தேசிய விருதும் பெற்றுள்ளது.

சமீப காலங்களாக இந்திய சினிமாக்களில் அதிகம் இடம்பெறும் சமூக அக்கறை கொண்ட படங்களில் குற்றம் கடிதலுக்கும் கண்டிப்பாக ஓர் இடம் உண்டு. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூன்றுதரப்பினரும்  எதிர்கால சமுதாய உருவாக்கத்தின் முக்கிய அங்கங்கள். இதை இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.




புலி திரைப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 200 திரையரங்குகளில் வெளிவரவிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி கேரளாவில் புலி 130 திரையரங்குகளில் தான் வெளிவரவுள்ளதாம். ஏனெனில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘எந்நு நின்டெ மொய்தீன்’ படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் புலி தியேட்டர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இனி புலி படத்தின் ரிசல்ட்டை பொறுத்தே, தியேட்டர் எண்ணிக்கை கூடும் அல்லது குறையுமாம். மேலும், கத்தி திரையரங்கு எண்ணிக்கையை விட புலி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது


 

Presenting the High Octane trailer of Eetti starring Atharvaa and Sri Divya. With action bursting at its seams, this is a movie to watch out for.

Movie - Eetti
Music - G. V. Prakash Kumar
Director - Raviarasu
Starring - Adharvaa, Sri Divya
Producer - S. Michael Rayapan






ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றன. அவர்கள் வளர்ந்ததும் இந்தக்கதையின் நாயகன், நாயகிகளாகிவிடுகின்றனர்.  அந்த இரண்டு நாயகிகளுடனான காதல் பயணத்தை,  அடல்ட்டு காமெடி வகையில் சொல்லியிருக்கும் படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா.

  

 நாயகன் ஜி.வி.பிரகாஷ், நாயகிகள் மணிஷா யாதவ், ஆனந்தி மூவருமே ஒரே ஏரியாவில் வசித்துவருகின்றனர். சிறு வயதிலிருந்தே பழகிவரும் இந்த மூவருக்குமிடையேயான காதல்+ காமம் கலந்த கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் டைட்டிலே கதையை எளிதில் புரியவைத்துவிடும். பள்ளிப் பருவத்தில் ஆனந்தியின் மீது காதலில் விழுகிறார் ஜி.வி. இருவரும் காதலிக்க, பின்னர் ஏற்படும் பிரச்னையினால் பிரிந்துவிடுகின்றனர். உடனே மனிஷா யாதவ் ஜி.வி.யிடம் காதலைச் சொல்ல ஆனந்தியின் மேல் இருந்த கோபத்தினால் மனிஷாவிற்கு ஓகே சொல்கிறார் ஜி.வி.

மனிஷாவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால் மனிஷாவிடன் சண்டைப் போட்டுவிட்டு கும்பகோணம் கிளம்புகிறார் ஜி.வி. ஆனந்தியை கும்பகோணத்தில் சந்திக்கும் ஜி.வி. அவர் மேல் காதலில் விழுகிறார். ஜி.வியின் காதலை ஆனந்தி ஏற்றுக் கொண்டு ஓகே சொன்னாரா? இல்லை ஆனந்தியுடனும் மீண்டும் பிரேக் அப் ஆகிவிடுகிறதா என்பதே த்ரிஷா இல்லனா நயன்தாரா.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரையிலும் குடித்துக்கொண்டே இருக்கும் ஜி.வி.பிரகாஷ், மாடர்ன் பெண்ணாக கவர்ச்சியில் சிக்ஸர் அடிக்கும் மனிஷா, குடும்பப் பெண்ணாக வந்தாலும் வசனங்களில் கவர்ச்சிகாட்டும் ஆனந்தி என்று படமே முழுக்க முழுக்க முருங்கக்காய் விஷயம் தான்.

ஜி.விக்கு சித்தப்பாவாக வரும் வி.டி.வி. கணேஷின் காமெடி சிரிக்க வைக்கிறது. ஆனந்தியுடன் ஜி.வியை சேர்த்துவைப்பதற்காக ஐடியா கொடுக்கும் சிம்ரன் இரண்டாம் பாதியை முழுமைப் படுத்தியிருக்கிறார்.

வி.டி.வி.கணேஷ், ஜி.வி.பிரகாஷ் மாறி மாறி ஆபாச வார்த்தைகளாகவே பேசி திரையரங்கையே அதிரடிக்கின்றனர்.  இன்றைய இளைய தலைமுறை காதலின் நிலை, அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை தெளிவாக திரையில் காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படியெல்லாமா டயலாக்குகளைப் படத்தில் வைப்பீங்க என்று கேட்கவும் தோன்றுகிறது.

யூகிசேது, ரோபோ சங்கர், மனோகர் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துச் சென்றிருக்கிறார்கள். இளைஞர்கள் நிச்சயம் ரசிக்கும் இப்படத்தை மற்ற எவரும் விரும்பமாட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.

இளைய தளபதி விஜய் திரையுலகில் யாருக்கு கஷ்டம் என்றாலும் முதல் ஆளாக ஓடிவந்து உதவக்கூடியவர். அதேபோல் இவர் ரசிகர்களும் சமீபத்தில் ஒரு நற்செயலை செய்துள்ளனர்.நடிகர் விஷால் நடிப்பில் பாயும் புலி திரைப்படம் சில பிரச்சனைகளால் செப்டம்பர் 4ம் தேதி வருமா? வராதா? என்ற குழப்பம் இருந்து வருகின்றது.

இந்நிலையில் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் #WeSupportVishal என்ற TAG-யை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இதற்கு நடிகர் விஷாலும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி படத்தின் வசூல் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே தான் போகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளிவரவிருக்கும் படம் புலி.

இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புலி ட்ரைலர் தற்போது வரை 1,01,954 லைக்ஸுகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் சல்மான் கான் நடித்த கிக் படத்தின் ட்ரைலரின் சாதனையை முறியடித்து இந்திய அளவில் முதலிடத்தில் அமர்ந்தார் விஜய். இதை ரசிகர்கள் வழக்கம் போல் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.